
மேல்மலையனூர், ஜூலை.09-
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், நொச்சலூர் கிராமத்தில்,
நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமி, தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருக்கும் போது, அதே ஊரைச் சார்ந்த சங்கர் வயது 21, தந்தை பெயர் வேலு, அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக 12.12.2021 அன்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்து, காவல் ஆய்வாளர் ஜோதி விசாரணை மேற்கொண்டார், இவ் வழக்கு விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி வினோதா முன்னிலையில் நடைபெற்றது, அரசு தரப்பு வழக்கறிஞராக காந்திமதி ஆஜரானார், நீதிமன்றம் விசாரணை முடிந்து, குற்றம் உறுதி செய்யப்பட்டு, குற்றவாளி சங்கருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும், அபராதம் கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும்,
மற்றொரு பிரிவின் கீழ் மூன்றாண்டு சிறை தண்டனையும், ரூபாய் 1000/- அபராதமும், அபராதம் கட்ட தவறினால் ஒரு மாதம் சிறை தண்டனையும் அளித்து 07-07-2026
அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசாங்கத்தின் சார்பாக ரூபாய் ஒரு லட்சம் இழுப்பீடு வழங்க ஆணையிடப்பட்டது,
இதைத் தொடர்ந்து குற்றவாளி சங்கர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.














Leave a Reply