Categories

வடகிழக்கு பருவமழை குறித்து முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்- கோவையில் செங்கோட்டையன் பேட்டி

கோவை அக் 23,
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

வடகிழக்கு பருவமழை குறித்து முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.நேற்று வருவாய் பேரிடர் மேலாண்மை அலுவலகத்திற்கு வருகை தந்து ஒவ்வொரு நிகழ்வும் எப்படி நடைபெறுகிறது என்பதை ஆய்வு செய்தார்.

நாங்கள் என்னென்ன பணிகள் மேற்கொள்கிறோம். எங்கு மழை கூடுதலாக இருக்கிறது என்பதெல்லாம் ஆய்வு செய்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழைக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே எண்ணம்.

இயற்கை சீற்றம் யாராலும் தடுக்க முடியாது.  அதில் இருந்து மக்களை காக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு துறைக்கும் முதலமைச்சர் அறிவுரை வழங்கி வருகிறார்.

மேயர் பிரியா குறித்த கேள்விக்கு, மக்கள் பணி எல்லோருக்கும் எல்லா இயக்கத்தினரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரசு செய்யும் பணிகளுக்கு அவர் உதவியாக இருக்க வேண்டும் என்றார்.

இன்று நாளை கன்னியாகுமரி தூத்துக்குடி நீலகிரி போன்ற ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களை மலை கூடுதலாக பெய்ய வாய்ப்பு இருக்கிறது ஒவ்வொரு நாளும் இயற்கையின் நிலைகள் என்ன இருக்கிறது என்பதை ஆன்லைன் மூலமாக மத்திய அரசு வானிலை நிலவரங்கள் தமிழ்நாட்டில் இருக்கிற பேரிடர் மேலாண்மை துறை மூலமாக பணிகளை மேற்கொண்டு வருகிறோம் இரவு நேரங்களில் என்ன நடைபெறுகிறது காலை மாலை எவ்வளவு எங்கே மழை பெய்திருக்கிறது எங்கு தண்ணீர் நிற்கிறது என்பதை எல்லாம் ஆய்வு செய்து உடனுக்குடன் நம்முடைய துறையின் சார்பாக மற்ற துறைகளுக்கு கவனத்தை எடுத்துச் செல்வோம்.

நாம் தமிழர் கட்சி கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கருத்துரிமை பேச்சுரிமைக்கு எதிராக தவெக அரசு செயல்படுகிறதா? என்பது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்தவர்,

என்னைப் பொறுத்தவரை ஒரு முதலமைச்சர் சுற்றுப்பயணம் செல்கிற போது அனுமதி இல்லாமல் நுழைவது சரியாக இருக்குமா? என்பதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.

தேர்தல் களத்தில் நின்று பணியாற்றுவது வேறு, அங்கு லட்சக்கணக்கான மக்கள் கூடி இருக்கிற இடத்தில் முதல்வருடைய பயணத்தில் இது போன்ற தடைகளை ஏற்படுத்தியது சரியா என்பதற்கு அவரே பதில் சொல்ல வேண்டும்.

இரவு உடையில் இருக்கும் பெண்ணை அதிகாலையில் கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்விக்கு,

என்ன உடையில் இருந்தார் என்று நீங்க தான் பார்த்து சொல்ல வேண்டும். எப்படி உடையில் இருந்தார் என்று எனக்கு தெரியாது. இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. என்னுடைய பொறுப்புக்கு இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாது, என்று கூறியபடி அங்கிருந்து கிளம்பினார்.