
கோவை மே 5,
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், கோவையின் ஆன்மீக அடையாளமான மருதமலை முருகன் கோயிலுக்கு இன்று பிரபல நாட்டுப்புறக் கலைஞரும் பாடகருமான வேல்முருகன் வருகை தந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தேர்தல் வெற்றியை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்க்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையில் அவர் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
பக்திப் பரவசத்துடன் தனது தனித்துவமான குரலில் “சேவல் கொடி பறக்குது… சேவல் கொடி பறக்குது…” என்ற பாடலைப் பாடினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்று உள்ள சேவல் சின்னத்தையும், அதன் வெற்றியைத் தீர்மானிக்கும் வேகத்தையும் மையமாக வைத்து இந்தப் பாடலை அவர் பாடியது அங்கு இருந்த பக்தர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
தமிழக அரசியலில் ஏற்பட்டு உள்ள இந்த புதிய மாற்றத்தையும், நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்தையும் மனதாரப் பாராட்டிய வேல்முருகன், “மக்களின் ஆதரவோடு இந்த வெற்றிப் பயணம் தொடர வேண்டும்” என மருதமலை முருகனிடம் வேண்டினார்.














Leave a Reply