
கோவை ஜூலை 20,
*முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் தயவால் வெற்றி பெற்று திமுகவில் இருந்து விலகிய பாபு அவதூறு பரப்பினால் அவதூறு வழக்கு போடப்படும்*
*திமுக 22 வது வார்டு செயலாளர் பிரபாகரன் எச்சரிக்கை*
கோவை மாநகராட்சியின் 22 வது வார்டு மாமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த பாபு இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகிய அவர் திமுக மீதும், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இது திமுகவினர் மட்டும் இன்றி அப்பகுதி பொது மக்களையும் கொதிப்படைய செய்தது.
இந்நிலையில் இது தொடர்பாக கோவை மாநகராட்சி, திமுக 22 வது செயலாளர் பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்தார் இது தொடர்பாக அவர் கூறுகையில்;-
20 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் திமுகவில் பயணித்து வருகின்றோம் என்றும், இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வந்தவர் தான் பாபு. அவர் செந்தில்பாலாஜி அவர்கள் தயவால் கவுன்சிலர் சீட்டும் பெற்றார். தலைமையின் அறிவிப்பிற்கு இணங்க, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களால், வெற்றி பெற்றார். அதிமுக கோட்டையாக இருந்த இந்த பகுதியை திமுக கோட்டையாக நாங்கள் பாடுபட்டு மாற்றினோம். வெற்றி பெற்ற பாபு ஊருக்குள் அவர் வருவதில்லை. தொழில் ரீதியாக திமுகவிற்கு வந்தார். ஆட்சி முடிந்தவுடன் வெளியே சென்று விட்டார். மக்கள் போராட்டங்களில் நாங்கள் கலந்து கொண்டோம். போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார் என்றால் இல்லை. ஒரு தண்ணீர் பாட்டில் கூட அவர் வாங்கி தர வில்லை. செந்தில்பாலாஜி அவர்களால் வெற்றி பெற்றவர், தற்போது அவர் தொடர்பாக அவதூறு பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கவுன்சிலராக உள்ள இவர் மக்களை ஒரு நாள் கூட சந்திக்க வில்லை. மாமன்ற கூட்டத்தில் கூட அதிகளவில் பங்கேற்க வில்லை. இவரது நடவடிக்கைகள் தொடர்பாக பல முறை தலைமைக்கும் நாங்கள் புகார் அளித்துள்ளோம். பாபுவின் தொழிலை காப்பாற்றிக்கொள்ளவும், அவர் மீது உள்ள வழக்குகளில் இருந்து விடுபடவும் அவர் கட்சியில் இருந்து சென்றுள்ளார். அவற்றை மறைக்கவே தேவையற்றவைகளை பேசி வருகின்றார். தொடர்ந்து, திமுக தொடர்பாகவோ, செந்தில்பாலாஜி தொடர்பாகவோ பேசினால் பாபு மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
செய்தியாளர் சந்திப்பின்போது, செயற்குழு உறுப்பினர் சர்தார், வார்டு துணைச்செயலாளர் சுப்பிரமணி, மகளிரணி வேலுமணி, சத்தியபிரியா, மகேஷ்வரி, சசிக்கலா, அமிஜம், கலாமணி, மற்றும் மூக்கையன், பூபாலன், ரங்கராஜ், அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.














Leave a Reply