Categories

கோவையில் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மாநில கோர் கமிட்டி கூட்டம்!

கோவையில் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மாநில கோர் கமிட்டி கூட்டம்! உறுப்பினர் நலன் முதல் எதிர்கால அரசியல் செயல்திட்டம் வரை முக்கிய ஆலோசனை!

கோவை கணபதியில் உள்ள தபோவன் ஹோம்ஸ்டேவில் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) – தமிழ்நாடு மாநில கோர் கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது.



தமிழ்நாட்டில் கட்சியின் அமைப்பு வளர்ச்சி, உறுப்பினர் சேர்க்கை, அடையாள அட்டை வழங்குதல், இலவச மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம்கள், உறுப்பினர்களுக்கான ரயில் பயண உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.



மேலும், மாவட்ட வாரியான அமைப்பு செயல்பாடுகள், உறுப்பினர் நலத்திட்டங்கள், அரசு நலத்திட்டங்களை உறுப்பினர்களிடம் கொண்டு சேர்த்தல் மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் செயல்திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநிலத் தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் மாரியப்பன், மதுரை மாவட்டச் செயலாளர் ராஜகோபால், வழக்கறிஞர் ஸ்ரீதர், நீலகிரி மாவட்டச் செயலாளர் ஃபைசல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.