Categories

தவெக பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம்
நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூர் கழகம் சார்பில்
தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை MLA கனிமொழி வழங்கினார்

கோவை நவ 06,
தமிழக வெற்றிக் கழக அரசு மதுவிற்கு எதிரான அரசு எனவே தூய்மைப் பணியாளர்கள் மதுப்பழக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூர் கழகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக அவர்களுக்கு பட்டுபுடவை, வேஷ்டி, இனிப்பு மற்றும் தீபாவளி சிறப்புத் தொகை வழங்கும் விழாவில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் பேசினார்.

தமிழக வெற்றிக் கழகம், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூர் கழகம் சார்பாக, நமது சமூக நலனுக்காக அரும்பணியாற்றி வரும் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோகப் பணியாளர்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு சிறப்பு கௌரவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பணியாளர்களுக்கு பட்டு சேலை, ஆண் பணியாளர்களுக்கு வேட்டி, இனிப்பு, காரம் மற்றும் தீபாவளி சிறப்புத் தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நரசிம்மநாயக்கன்பாளையம் தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. கனிமொழி சந்தோஷ் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்பு, தீபாவளி சிறப்புத் தொகைகளை வழங்கினார்.

தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களிடம் பேசும் போது, தூய்மைப் பணியார்களை அக்கா, தம்பி, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா என உறவு முறையுடன் அழைத்தார். மழை காலங்களில் உங்களுடைய சேவை மிகப்பெரியதாக இருக்கும், த வெ க அரசு உங்களுக்கு தூய்மை தேவதைகள் என பெயர் வைத்துள்ளது. அதற்கு காரணம் உங்களது பணிகளை யாராலும் ஈடு செய்ய முடியாது. நீங்கள் ஒரு நாள் உடம்பு சரியில்லை என்று படுத்துவிட்டால், எங்களுக்கு 10 நாள் உடம்பு சரியில்லாமல் போய்விடும், அந்த அளவிற்கு உங்களது பணி கட்டாயமானதாக உள்ளது.

உங்களது கோரிக்கைகளை தமிழக முதல்வர் விஜய் நிச்சயம் நிறைவேற்றித் தருவார். குறிப்பாக உங்களது சம்பள உயர்வை நிச்சயம் கூடிய விரைவில் நிறைவேற்றுவார் என்றார். மேலும் பேரூராட்சி செயல் அலுவலரிடம் எங்களது பணியாளர்களை எந்தவித சிரமமும் இன்றி பார்த்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் எங்கள் அரசு மதுவிற்கு எதிரான அரசு, எனவே நீங்கள் மது பழக்கத்தை கொஞ்சம் குறைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்காக நாங்கள் நிறைய செய்யவுள்ளோம். அதேபோல் நீங்கள் எங்களுக்காக இந்த செயலை குறைத்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

இந்நிகச்சியில் தமிழக வெற்றிக் கழக பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் நித்தின் மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் குணாளன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

மேலும், இந்நிகழ்வில் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூர் கழகத்தைச் சேர்ந்த தனபாலன், சம்பத் குமார், சிவா, கோபால், ஹரி, பிரபு, கனகசபாபதி, கனகராஜ், கார்த்திக் ராகுல், மணிகண்டன், நித்திஷ், விக்னேஷ், ராகுல், சரவணன், ரமேஷ், கிருஷ்ணா, லோகேஷ், சந்தோஷ், சுரேஷ் மற்றும் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

சமூக நலனில் அக்கறையுடன் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோகப் பணியாளர்களின் சேவையைப் போற்றும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது.