
கோவை அக் 30,
தீபாவளியை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு மற்றும் புத்தாடைகளை அன்பு உள்ளங்கள் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் பிரகாஷ் ரங்கசாமி வழங்கினார்.


அன்பு உள்ளங்கள் அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கி வருகின்றார் இவ்வமைப்பின் நிறுவனத்தலைவர் பிரகாஷ் ரங்கசாமி.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் மதிய உணவை வழங்கினார்கள். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வட்டாச்சியர் வசந்த ராம்குமார் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். இதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட தொண்டாமுத்தூர் பகுதியில் சுமார் 25 மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு மற்றும் புத்தாடைகளை இவ்வமைப்பின் நிறுவத்தலைவர் பிரகாஷ் ரங்கசாமி வழங்கினார். இதில் இரண்டு குழந்தைகள் ஆர்டிஸ்சியம் பாதிப்படைந்த குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் செந்தில்குமார், ராதாகிருஷ்ணன், விஜயலட்சுமி,பானு, ரஞ்சிதம்,லதா,கௌரி சங்கர் மற்றும் ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.














Leave a Reply