Categories

வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய 44 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் – காவல்துறையிடம் ஒப்படைப்பு

தர்மபுரி அக் 30,
தருமபுரி மாவட்ட அரூர் தருமபுரி பென்னாகரம் பாலக்கோடு பாப்பிரெட்டிப்பட்டி வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 44 கள்ளத் துப்பாக்கிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.



தருமபுரி மாவட்டத்தில் வனவிலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கும் நடவடிக்கையாக வனத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் வனப்பகுதிகளில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 44 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளை வனப் பாதுகாப்பு அலுவலர் ராஜாகம், வனச்சரகர் முரளி உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பறிமுதல் செய்யப்பட்ட 44 துப்பாக்கிகளையும் உரிய விசாரணை மற்றும் சட்டப்படியான நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.