
கோவை ஜூலை 26,
கோவை 22 நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட அரசுபள்ளி மாணவ மாணவிகளுக்கு வி கே வி குருப்ஸ் சார்பாக கல்வித்திறன் ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

கோவை 22 நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சோமையனூர் வி கே வி குருப்ஸ் சார்பாக தொடர்ந்து 20 ஆண்டுகளாக கல்வித்திறன் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் இந்த ஆண்டு கல்வித்திறன் ஊக்கத்தொகை வழங்கும் விழா வி கே வி இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வி கே வி குரூப் நிர்வாக இயக்குனர் வி கே வி எஸ் வினிஸ் வரவேற்று பேசினார். விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஒ ஆறுமுகசாமி, நஞ்சுண்டாபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வி கே வி சுந்தர்ராஜ் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.

இதில் மனவளக்கலை மன்றம் தலைவர் வெள்ளியங்கிரி, உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் புலவர் அப்பாவு, இலவச ஐ ஏ எஸ் தேர்வு பயிற்சி மைய பேராசிரியர் கனகராஜ், எஸ் பி எம் குரூப்ஸ் தலைவர் பச்சைமுத்து, பன்னீர்மடை ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் மகேஸ்வரன், கணுவாய் அரசு உயர்நிலைப்பள்ளி பி டி ஏ தலைவர் பாரதி செல்வம், முன்னாள் ஆசிரியர் மாணிக்கம், முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர்கள் மகேஸ்வரன், திருநாவுக்கரசு மற்றும் ஆசிரியர் சின்னராஜ், ஆர் ஆர் குரூப்ஸ் தியாகராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசி பரிசுகளை வழங்கினர்.

இதில் நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மற்றும் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும் சோமையனூர், உச்சையனூர், 22 நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம், வரப்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம், திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய சுமார் 360 மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நஞ்சுண்டாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் வி கே வி கார்த்திகேஸ்வரி சுந்தர்ராஜ், முன்னாள் உறுப்பினர்கள் நாகராஜன், ஜெயந்தி, சோமசுந்தரம், ஆறுமுகம், கிருஷ்ணவேணி, குமாரசாமி, புஷ்பலதா, ஆனந்தன், திவ்யா, இந்திராணி, அம்சவேணி, அருண்குமார் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை சூர்யா என்கிற கே ஆர் தங்கவேல் தொகுத்து வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது கோவை மாவட்டம் கருணாச்சியம்பாளையம் ஒன்றியம், 22 நஞ்சுண்டாவர கிராமத்தில், மாணவர் மாணவிகளுக்கு கடந்த 20 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த பஞ்சாயத்திற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இந்த உதவி தொகையை வழங்கியிருக்கிறோம். மேலும் அரசு பள்ளியில் பயிலும் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களான புத்தகம், புத்தகப்பை, வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த உதவிகளை எனது எனது சொந்த உழைப்பில் கிடைத்த வருவாயில் செய்து வருகிறேன். கடந்த 20 ஆண்டுகளாக எந்த தடையின்றி இந்த உதவிகளை வழங்கி வருவதாக முன்னாள் ஊராட்சி தலைவரும்,விகேவி குழுமங்களின் நிறுவனத்தலைவர் விகேவி சுந்தர்ராஜ் தெரிவித்தார்.














Leave a Reply