
கோவை நவ 6,
அன்பு உள்ளங்கள் அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கி வருகின்றார் இவ்வமைப்பின் நிறுவனத்தலைவர் பிரகாஷ் ரங்கசாமி.
தீபாவளி பண்டிகையை அசைவ உணவு முட்டையுடன் கூடிய சிக்கன் பிரியாணியை வழங்கினார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வட்டாச்சியர் வசந்த ராம்குமார், வழக்கறிஞர் புஷ்பானந்தம் மற்றும் நிர்மலா தேவி,மாற்றுதிறனாளிகள் இளநிலை உதவியாளர் சொர்ணபவானி,உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கினார். இதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட தொண்டாமுத்தூர் சந்தேகவுண்டம் பாளையம் பகுதியை சார்ந்த ஆர்ட்டிஸியம் பாதித்த குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை இவ்வமைப்பின் நிறுவனத்தலைவர் பிரகாஷ் ரங்கசாமி வழங்கினார்.

இந்த நிகழ்வில் செந்தில்குமார், ராதாகிருஷ்ணன், விஜயலட்சுமி,பானு, ரஞ்சிதம்,லதா,கௌரி சங்கர்,அணில் குமார், பாக்கிய லட்சுமி மற்றும் ஈஸ்வரன்,மகேந்திரன், சூர்யா,ஆரா ஆகியோர் உடனிருந்தனர்.














Leave a Reply