Categories

காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டத் தூண்கள் இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்


தர்மபுரி அக் 28,
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில்
சட்டத் தூண்கள் இயக்கத்தின் சார்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மதிக்காமலும் பொதுமக்களின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்காமலும்  காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட BDO அலுவலர்களைக் கண்டித்து, இன்று காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்ட தூண்கள் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் குமரவேல்,
முத்து சட்டத் தூண்கள் இயக்கத்தின் மாநில துணைச் செயலாளர் நாகராஜ், மாவட்டத் தலைவர் பி.கே.சிவா, மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் கௌதம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் ரகுபதி, ஒன்றிய செயலாளர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர்.

மேலும் ராமமூர்த்தி, கிஷோர், கணபதி, சதீஷ்குமார், கிருபா, பச்சையப்பன், சின்னசாமி, முனியப்பன், அழகுபெருமாள், காந்தி, ராஜா, முருகேசன் உள்ளிட்ட சட்ட தூண்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


தருமபுரி  மாவட்ட
செய்தியாளர்
ஜி.முனியப்பன்
செல்: 9600869772