
கோவை அக் 28,
கோவை வைசியாள் வீதியில் (Vaisial Street) இயங்கி வரும் ஸ்நாக்ஸ் கடையில், வாடிக்கையாளர் போல வந்து ஸ்நாக்ஸ் வாங்குவது போல் நடித்து, ஊழியரின் கவனத்தைத் திருப்பி பொருட்களை கவரில் போட்டு பையில் போடும் போது செல்போனையும் தான் வைத்து இருந்த கட்டப்பையில் தள்ளிவிட்ட திருடிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி கடைக்காரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை டவுன்ஹால் மற்றும் வைசியாள் வீதி சுற்றி உள்ள பகுதிகள் எப்போதுமே வணிக ரீதியாகப் பரபரப்பாகக் காணப்படும் இடங்களாகும். இந்நிலையில், வைசியாள் வீதியில் உள்ள ஸ்நாக்ஸ் கடை ஒன்றில் வழக்கம் போல் வியாபாரம் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது.
அப்போது கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவன், ஸ்நாக்ஸ் ஆர்டர் செய்து அதனை பேக் செய்யும் போது ஊழியரிடம் பேச்சுக் கொடுத்து உள்ளான்.
கடையில் வாடிக்கையாளர்களின் கூட்டம் இருந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், மேசையின் மீது வைக்கப்பட்டு இருந்த ஊழியரின் செல்போனைத் தந்திரமாகத் மேஜையில் இருந்து கட்டப்பையில் தள்ளி விட்டு தூக்கிக் கொண்டு நைஸாகக் கடையை விட்டு நழுவி உள்ளான்.
சற்று நேரம் கழித்துத் தனது செல்போனைக் காணாமல் தேடிய கடை ஊழியர், சந்தேகம் அடைந்து கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.
அப்போது, ஸ்நாக்ஸ் வாங்க வந்த நபர் மிகச் சாதுரியமாகக் கைவரிசை காட்டி செல்போனைத் திருடிச் செல்லும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்தச் திருட்டுச் சம்பவத்தின் சி.சி.டி.வி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.














Leave a Reply