
தேர்தல் பரப்புரை: அரூர் பகுதியில் ரூ.22 லட்சம் ரொக்கம் பறிமுதல்!
கேட்பாரற்ற ஸ்கூட்டி டிக்கியில் கட்டுக்கட்டாக பணம் – 20 பேர் ஓடி மறைவு
தர்மபுரி, ஏப்ரல்.20:
தேர்தல் நெருங்கும் நிலையில் தர்மபுரி மாவட்டம், அரூர் அம்பேத்கர் நகர் அருகே பெட்ரோல் பங்க் முன்பு கேட்பாரற்ற ஸ்கூட்டி டிக்கியில் ரூ.22 லட்சத்து 3 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சுமார் 20க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் அங்கு கூடி நின்றிருந்தனர். அப்போது வழியாக வந்த தேர்தல் பறக்கும் படையினரைப் பார்த்ததும் அவர்கள் ஓடி மறைந்ததாகக் கூறப்படுகிறது. சந்தேகத்திற்குரிய ஸ்கூட்டியை சோதனை செய்ததில் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டெடுக்கப்பட்டது.

இந்த ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படை குழு அரூர் வருவாய்க் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரான செம்மலையிடம் ஒப்படைத்தது.
கேட்பாரற்ற இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து ஆர்டிஓ அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பணம் பதுக்கியிருக்கலாம் என சந்தேகித்த தேர்தல் பறக்கும் படையினர் அருகிலுள்ள நபர்களிடம் விசாரணை நடத்தினர்.













Leave a Reply