
கோவை அக் 24,
கோவை கே.கே.நாயுடு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்த பட்டியலின மாணவன் அகிலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியின் நாகை திருவள்ளுவன் காவால் துறை விசாரணை மீது கடும் குற்றச்சாட்டு…
நாகை திருவள்ளுவன் பேசியதாவது:
“அகிலனின் தற்கொலைக்கு பின்னால் பல்வேறு சாதி ரீதியான மன அழுத்தங்கள் மட்டுமல்லாது, சாதி ரீதியான வன்முறைகளும் அந்த பள்ளியில் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக அனைத்து மாணவர்கள் மத்தியில் யாரெல்லாம் ஸ்காலர்ஷிப் வாங்குபவர்கள், யாரெல்லாம் எஸ்.சி மாணவர்கள் என பட்டியலின மாணவர்களை பிற மாணவர்களிடமிருந்து அன்னியப்படுத்தி காட்டுவதுடன், ‘எஸ்.சி மாணவர்கள் என்றால் மாட்டுக்கறி தின்பவர்களா?’ என்பது போன்ற கேள்விகளை எழுப்பும் மோசமான சாதிவெறி பிடித்த ஆசிரியர்கள் இன்னும் உள்ளனர் என்பதற்கு உதாரணம் தான், இந்த மரணத்திற்கு காரணமான விஜயகுமார் என்ற ஆசிரியர்.
ஆசிரியர் மூலமாகவே சாதியை தெரிந்துகொண்ட மாணவர்கள் அகிலனிடம் வேற்றுமை பார்த்து உளவியல் ரீதியாக டார்ச்சர் செய்துள்ளனர். இதனால் வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, சாதியை வெளிப்படையாக கேட்டு அவமானப்படுத்திய விஜயகுமார் என்ற ஆசிரியரையும், நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரையும், தாக்கிய மாணவர்களையும் கைது செய்ய வேண்டும். ஆனால் இதுவரை ஆசிரியரை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.”














Leave a Reply