Categories

தருமபுரி மறைமாவட்டம் முழுவதும் கல்லறை திருவிழா: அரூரில் சிறப்பு திருப்பலி



தருமபுரி, நவ. 2-

தருமபுரி மறைமாவட்டத்திற்கு உட்பட்ட அரூர் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தின் இயேசு சபை சார்பில் கல்லறை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.



அனைத்து புனிதர்கள் திருநாள் மற்றும் இறந்த விசுவாசிகளின் நினைவு நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் கல்லறை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி அரூர் தூய இருதய ஆண்டவர் ஆலயத்திற்கான கல்லறை தோட்டத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.



*இயேசு சபையை சேர்ந்த பங்குத்தந்தை அருட்பணி. ராஜா சேசுராஜ், சே.ச., அவர்கள் தலைமையில்* திருப்பலி நிறைவேற்றப்பட்டு, இறந்த மூதாதையர்கள் ஆன்ம இளைப்பாறுதலுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

இதில் அரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, தங்கள் முன்னோர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பங்கு பேரவையினர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதேபோன்று தருமபுரி மாவட்டம் முழுவதும் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி
பி பள்ளிப்பட்டி காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் கல்லறை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.