Categories

சுங்கச்சாவடி அருகே 3 மாதமாக சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த இளைஞர் மீட்பு: தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்ப்பு



*அரூர், நவ. 6-*

அரூர் அடுத்த எச்.புதுப்பட்டி சுங்கச்சாவடி அருகே தெலுங்கு மொழி பேசும் இளைஞர் (28) ஒருவர் கடந்த 3 மாதங்களாக ஒரே இடத்தில் இருந்து வந்துள்ளார். மழை, வெயில் பார்க்காமல் மனநலம் பாதித்த நிலையில் அங்கேயே இருந்த அவருக்கு, அந்த வழியாக சென்ற லாரி டிரைவர்கள் சிலர் உணவு வாங்கி கொடுத்து வந்துள்ளனர்.



இதை கவனித்த பஸ் டிரைவர் ஒருவர், சமூக சேவையாளர் ச.ரமேஷுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து ஸ்ரீ சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் ச.ரமேஷ், அரூர் லட்சுமி பேக்கரி பழனி ஆகியோர் இணைந்து 102 ஆம்புலன்ஸ் மூலம் சுங்கச்சாவடி அருகே மீட்கப்பட்ட மனநலம் பாதித்த நபரை முறையாக கோபிநாதம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காவல் நிலையத்தின் ஒப்புதலின் பேரில், அவரை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநல பிரிவில் சேர்த்தனர்.