
கோவை நவ 5,
யுனைடெட் கல்வி நிறுவனத்தில் எக்ஸ்ப்ளோர் 2026
மாபெரும் டிரோன் கண்காட்சி 2 நாள்கள் நடைபெற்றது
கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு திறந்து வைத்தார்
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ள யுனைடெட் கல்வி நிறுவனங்கள் சார்பில் எக்ஸ்ப்ளோர் 2026 என்ற பெயரில் ஸ்கை கேன்வாஸ், ரெஸ்க்யூ கேர், பார்மாஸ்பியர் மற்றும் காஸ்மிக் ட்ரீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மாபெரும் கண்காட்சியினை கல்லூரி வளாகத்தில் இரண்டு நாட்கள் நடத்தினர். மேலும் கல்லூரி மைதானத்தில் டிரோன் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இக்கண்காட்சியை கோவையை சேர்ந்த 25 பள்ளிகளில் இருந்து சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ள யுனைடெட் கல்வி நிறுவன வளாகத்தில் பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு துறைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஆண்டு தோறும் கண்காட்சிகளை நடத்தி வருகின்றனர். அதேபோல் இந்த ஆண்டு 2 நாட்கள் யுனைடெட் கல்வி நிறுவனங்கள் சார்பில் எக்ஸ்ப்ளோர் 2026 என்ற பெயரில் ஸ்கை கேன்வாஸ், ரெஸ்க்யூ கேர், பார்மாஸ்பியர் மற்றும் காஸ்மிக் ட்ரீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மாபெரும் கண்காட்சியினை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கூடலூர் நகராட்சித் தலைவர் அறிவரசு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு டிரோன் கண்காட்சியினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தூ பார்வையிட்டார். கல்லூரியின் தலைவர் பொறியாளர் சண்முகம், முதல்வர் முனைவர் டாக்டர் கலைச்செல்வன் மற்றும் கல்வி இயக்குநர் முனைவர் டாக்டர் எஸ். மைதிலி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று கண்காட்சியினை பார்வையிட வந்திருந்த மாணவ மாணவிகளை வரவேற்று, சிறப்பு விருந்தினரைக் கௌரவித்துச் சிறப்பித்தனர்.
யுனைடெட் கல்வி நிறுவனங்களான பொறியியல், ஃபார்மசி, மெடிக்கல் சயின்ஸ் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளை சார்ந்த மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் இக்கண்காட்சியில் இடம் பெற்றன. மேலும் மருத்துவ மனை ஐ சி யு மாதிரிகள், மருந்தக மாதிரிகள், அறுவை சிகிச்சை அரங்கு மாதிரிகள் மற்றும் கருவிகளை காட்சிப் படுத்தியிருந்தனர்.
இக்கண்காட்சியில் முக்கிய அம்சமாக, பல்வேறு வகையான 31 ட்ரோன் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்.டது. ட்ரோன்களின் வடிவமைப்பு, முக்கிய பாகங்கள், செயல்படும் விதம் மற்றும் விவசாயம், கண்காணிப்பு, புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு, போக்குவரத்து, தொழில்துறை தானியக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவற்றின் பயன்பாடுகள் குறித்து ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறையின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர் தன்னார்வலர்கள், பள்ளி மாணவர்களுக்கு விளக்கினர். நேரடி செயல்முறை விளக்கங்கள் மாணவர்களுக்கு நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்ள சிறந்த வாய்ப்பாக அமைந்தன. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்காட்சியைப் பார்வையிட்டு, ட்ரோன் மாதிரிகளின் செயல்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பி விளக்கங்களைப் பெற்றனர்.
மேலும் மாணவ மாணவிகளுக்கு பூகோள வடிவ ஏர் பலூனுக்குள் புரொஜொக்டர் மூலம் 360 டிகிரியில் விண்வெளி குறித்த வீடியோ ஒளிபரப்பட்டது அதனை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். கோவை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளிகளிலிருந்து இரண்டா யிரதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சியினை கண்டு பயனடைந்தனர். இந்நிகழ்வு மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம், தொழில்நுட்ப அறிவு, படைப்பாற்றல் மற்றும் புதுமையான சிந்தனைகளை வளர்க்கும் சிறந்த கற்றல் தளமாக அமைந்தது.
தொடர்ந்து கல்லூரி மைதானத்தில் கிரீன் டெக் ஏவியேசன் நிறுவனம் சார்பில் ஏர் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான டிரோன்கள் மற்றும் சிறிய ரக விமானங்களை எவ்வாறு பறக்கவிடுவது தரையிறக்குவது என்பது குறித்தும், அது எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும், சிறிய அளவிலான விமான மாதிரிகளை விண்ணில் ஏவுவது குறித்த பயிற்சிகள் வழங்கியும் மாணவ மாணவிகளுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினர்.
குறிப்பாக டிரோன் மூலம் பூக்கள் கொட்டி சிறப்பு விருந்தினர்களை வரவேற்றது, விவசாயத்திற்கு பயன்படும் டிரோன் மூலம் பன்னீர் தெளித்தது மற்றும் அதிவேகமாக பறக்கும் டிரோன்கள் மாணவர்களை கவர்ந்தன. இரண்டு நாட்கள் நடைபெற்ற இக்கண்காட்சியிலே பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், கல்லூரியின் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவர்களிடையே வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, எதிர்காலத் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட EXPLORE 2026 கண்காட்சி, 25 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 3,000 மாணவர்களின் உற்சாகமான பங்கேற்புடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.














Leave a Reply