
தர்மபுரி அக் 15,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஸ்ரீ அபிதகுஜாம்பாள் சமேத ஆருண்ணேஸ்வரர் மலைக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 16ம் தேதி நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை 30ம் நாள் மண்டல பூஜையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள்,, தீபாராதனை நடந்தது.
சிறப்பு விருந்தாக பங்கேற்ற பாமக மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ SP.வெங்கடேஷ்வரன் பொதுமக்களுக்கு
அன்னதானம் வழங்கி விழாவினை துவக்கி வைத்தார்.
காரிமங்கலம் முன்னாள் பேரூராட்சி தலைவர் சத்திய அசோக்குமார், தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் கொள்ளுப்பட்டி மாதப்பன் பாமக நகர செயலாளர்
ஒன்றிய செயலாளர்கள் சஞ்சீவன் குமரன் சக்திவேல் ராம்குமார் சம்பத் திண்டல் சரவணன் கோவிந்தசாமி உட்பட பலர் முன்னிலை வகித்தனர்,
விழாவில் 6 ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர் ரமேஷ், கவுன்சிலர்கள் இந்திராணி, ராமச்சந்திரன், சக்தி, ரமேஷ் நிர்வாகிகள் சபரி, செல்வம், திருப்பதி, பரிதாபானு மற்றும் பாமக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர்
முனியப்பன்
+91 96008 69772













Leave a Reply