
பாலக்கோட்டில் டாக்டர். அப்துல் கலாம் பிறந்தநாள் விழா – முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பாமக மாவட்ட செயலாளர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்று மரக்கன்று அன்னதானம் வழங்கினார்கள்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளையின் சார்பில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் 95வது பிறந்தநாள் விழா அறக்கட்டளை தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தாசில்தார் ஜெகதீசன், காவல் ஆய்வாளர் மணிவண்ணன், வனசரக அலுவலர் கார்த்திக்கேயன், பாஜக மாவட்ட தலைவர் சரவணன், நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவா, தொழிலதிபர்கள் முத்து, பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முன்னாள் அமைச்சர், கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ, பாமக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏஸ்.பி.வெங்கடேஷ்வரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று டாக்டர்.அப்துல் கலாம் உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பாலக்கோடு பேருந்து நிலையம் தொடங்கி எம்.ஜி.ரோடு, கடைவீதி, தக்காளிமண்டி உள்ளிட்ட முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இவ்விழாவில் டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.













Leave a Reply