Categories

அடையாள அட்டை கட்டாயத்தை கண்டித்து , பென்னாகரம், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  விவசாயிகள் ஆர்ப்பாட்டம்



*தருமபுரி, நவ.5-*

ஒன்றிய, மாநில அரசுகளைக் கண்டித்து, அடையாள அட்டை என்ற பெயரில் விவசாயிகளின் வாழ்வாதாரம் சீரழிக்கப்படுவதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம்     பென்னாகரம்   வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு இன்று காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் எழுப்பிய கோரிக்கைகள்:

விவசாயிகள் அடையாள அட்டை (Farmer ID) இருந்தால் தான் உரம் வாங்க முடியும், அரசின் சலுகைகளை பெற முடியும், பயிர் காப்பீடு செய்ய முடியும் என்ற ஒன்றிய அரசின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பிற்கு பிறகு, குத்தகை நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், வனப்பகுதிகள், மலை அடிவாரங்கள், கோவில் மற்றும் இனாம் நிலங்களில் பயிர் செய்து வரும் பல லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு இதுவரை அடையாள அட்டை வழங்கப்படவில்லை. இந்த உத்தரவை கட்டாயமாக்கினால் அவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

எனவே ஏற்கனவே நடைமுறையில் உள்ள பழைய முறைப்படியே அரசின் சலுகைகளை தொடர்ந்து வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பென்னாகரம்  பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.