Categories

கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை தாக்கி வீடு சேதம்


கோவை நவ 11,
கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கதிர்நாயக்கன்பாளையம் கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி நேற்று இரவு வந்த காட்டு யானை ஒன்று அங்கிருந்த பூங்கொடி என்பவரின் வீட்டை சேதப்படுத்தி, அவர் வாங்கி வைத்திருந்த ரேசன் அரிசியை சாப்பிட்டு சேதப்படுத்தியும், சுவர், கூரை, கேட் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியும் சென்றுள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்த வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர். அவர்களிடம் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் வரும் காட்சி அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. அது தற்போது வெளியாகியுள்ளது.