Categories

வீட்டில் வைத்திருந்த 15 சவரன் நகை திருட்டு – உறவினர் பெண் கைது

கோவை நவ 11,
கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ஜோதிபுரம் பகுதியில் தினேஷ் பாபு என்பவர் மனைவியுடன் தீபாவளிக்காக மாமியார் வீட்டிற்கு சென்ற நேரத்தில் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகை திருடுபோயுள்ளது. இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், 12 மணி நேரத்தில் திருட்டில் ஈடுபட்ட உறவுக்கார பெண்ணான சுசீலா என்பவரை கைது செய்து நகையை மீட்டதுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரம் கற்பூர நகரில் தனது மனைவி, தாய் மற்றும் தந்தையுடன் குடியிருந்து வருகிறார் தினேஷ் பாபு. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் தீபாவளி பண்டிகையை ஒட்டி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அன்னூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஒரு நாள் கழித்து தீபாவளி பண்டிகை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு மற்றும் பீரோ எதுவும் உடைக்காமல் வீட்டின் பீரோவில் இருந்த 15 சவரன் தங்க நகை மட்டும் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் தினேஷ் பாபுவின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் அருகில் உள்ள நாயக்கனூரில் தனது உறவினர் பெண்ணான சுசீலா என்பவர் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளனர்.

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சுசீலா அதிகாலை நேரத்தில் தினேஷ் பாபுவின் வீட்டிற்கு வந்து சாவி வைத்திருந்த இடம் தெரிந்து அதை எடுத்து வீட்டைத் திறந்து வீடில் இருந்த பீரோவையும் திறந்து அதில் இருந்த 15 சரவன் தங்க நகையை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து 12 மணி நேரத்தில் குற்றவாளி சுசீலாவை பிடித்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். உறவினர் பெண்ணே திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.