
தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட லிங்கநாயக்கன்அள்ளி அருகே உள்ள தாஸ் நகர் கிராமத்தில் 144 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
அரூர் – கடத்தூர் சாலையில் இருந்து தாஸ் நகருக்கு செல்ல குறுகிய பாதையே உள்ளது. இந்தப் பாதையை விரிவுபடுத்த வேண்டும் எனவும், நியாய விலைக் கடை, நூலகம், சாக்கடை கால்வாய், குடிநீர் தொட்டி, நிழற்கூடம், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் கோரி, கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் 20-க்கும் மேற்பட்ட முறை மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், பாதையை விரிவுபடுத்த கோரி மனு அளிக்கப்பட்ட நிலையில், பாதையின் அருகே உள்ள நில உரிமையாளர் ஒருவர் பாதை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனைக் கண்டித்தும், அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரக்கோரியும் கிராம மக்கள், அரூர் – கடத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிராம மக்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி மாவட்டச் செயலாளர் சென்னகிருஷ்ணன் தலைமையில்ரிஷிகா நிர்வாகிகள் அன்புமணி ராஜசேகர் மாது மாயவன் கோவிந்தசாமி தீபன் சுகுமார் அன்பரசு மாது கவுண்டமணி மாரியப்பன் ரவிக்குமார் கிருஷ்ணமூர்த்தி மாது திருமால் உள்ளிட்ட
ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
சாலை மறியல் காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் மற்றும் காவல் துறையினர், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
“பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகளுக்காக மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம்” என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.














Leave a Reply