
தர்மபுரி நவ 17,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஶ்ரீ வேணுகோபால ஐயப்ப சுவாமி திருக்கோவில் கார்த்திகை 1-ம் நாள் இன்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.


இன்று காலை கணபதி பூஜை உடன் சுவாமிக்கு அதிகாலை முதலே பல்வேறு திரவிங்களான பால்,பன்னீர், திராட்சை,சந்தனம்,இளஞீர்,நெய் போன்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு மகாதீபம் காட்டப்பட்டது.
இதையடுத்து குருசாமி முன்னிலையில் கருப்பு, காவி, நீல நிற ஆடைகளை பக்தர்கள் அணிந்து .
துளசி,உத்தரட்ச மாலையை சரண கோஷங்களைச் சொல்லி சுவாமியே சரணம் ஐயப்பா என்று மாலை அணிந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வேங்கை கோவிந்தராஜ், சங்கர் குருசாமி ,சரவணன் குருசாமி மற்றும் விழா குழுவினர் செய்தனர்.
தருமபுரி மாவட்ட செய்தியாளர்
ஜி.முனியப்பன்
செல்: 9600869772














Leave a Reply