
கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் புனித நீராடி, ஐயப்பனுக்கு மாலை அணிந்து ஏராளமான பக்தர்கள் தங்களது மண்டல விரதத்தை தொடங்கினர்.
ஐயப்பன் பக்தர்கள் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் நாளில் மாலை அணிந்து, 41 நாட்கள் மண்டல விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்குச் சென்று ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம்.
அதன்படி, இன்று கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து காவி மற்றும் கருப்பு நிற வேஷ்டி அணிந்து, நீண்ட வரிசையில் நின்று குருசாமிகள் மற்றும் குருக்கள் கைகளால் ஐயப்பனுக்கு மாலை அணிந்து கொண்டனர்.
குருசாமிகள் முன்னிலையில் சரண கோஷம் முழங்க மாலை அணிந்த பக்தர்கள், தங்களது மண்டல விரதத்தை பக்தியுடன் தொடங்கினர். இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.














Leave a Reply