Categories

கன்னியாகுமரி உபரி நீர் திறப்பு கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு

கன்னியாகுமரி அக் 26,

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் 2000 கன அடி உபரி நீர் திறப்பு காரணமாக கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு திறப்பு அருவியில் ஆக்ரோஷமாக கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் வெள்ள பெருக்கு காரணமாக சேதம் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் வடகிழக்கு பருவமழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து 2000 கன அடி  உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக ஆற்றில் வெள்ளம் கரைப் புரண்டு ஓடுகிறது.  திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆக்ரோஷமாக பாய்ந்து வருகிறது.



    அருவியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு காப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் வெள்ள பெருக்கு காரணமாக சேதம் அடைந்தது.   கல் மண்டபம், நீச்சல் குளத்தை மூழ்கடித்து தண்ணீர் ஆக்ரோஷமாக பாய்கிறது. வெள்ள பெருக்கு காரணமாக சிறுவர்கள் பூங்காவும் மூழ்கி உள்ளது.

சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும். அருவி பகுதிக்கு செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் குளிக்காமல் இருக்க தடுப்பு வேலி அமைத்து பேருராட்சி ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.