
கோவை நவ 8,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பொதுமக்களால் பாகுபலி என அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் நடமாடி வருகிறது
இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறி அருகில் இருக்கக்கூடிய விவசாய தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் வரக்கூடிய அந்த யானையை விரட்டும் பணியில் வனத்துறை ஈடுபட்டு வருகிறது

இந்த நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை பாகுபலி மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் உள்ள வனக்கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்தது
இதனைப் பார்த்த பல கல்லூரியை சார்ந்தவர்கள் உடனடியாக மேட்டுப்பாளையம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததன் பேரில் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனத்துறை ரோந்து வாகனங்கள் மூலம் அங்கு சென்று அந்த யானையை விரட்ட முயன்றனர் வனத்துறையினர் ரோந்து வாகனங்களில் சைரன் ஒலி எழுப்ப செய்து யானையின் அருகே சென்று அந்த யானையை வனத்திற்குள் விரட்டமுயன்றனர்
தற்போது எதிர்பாராத விதமாக வனத்துறையினரின் ரோந்து வாகனம் காட்டு யானை பாகுபலி மீது கால் பகுதியில் மோதியது இதனால் ஆக்ரோஷம் அடைந்த காட்டு யானை பயங்கரமாக கத்திக் கொண்டு அங்கும் இங்குமாக உலாவியதால் பரபரப்பு ஏற்பட்டது
பின்னர் ஒரு வழியாக யானை அங்கிருந்து சென்ற நிலையில் காட்டு யானை மீது வனத்துறை நோர்ந்து வாகனம் மோதிய வீடியோ காட்சிகள் வெளியாகிய தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
யானையை விரட்ட வேண்டிய வனத்துறை அதிகாரிகள் அதன் மீது வாகனத்தை ஏற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது















Leave a Reply