
கோவை மார் 21,
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து அவமதித்த சம்பவம் தொடர்பாக தி.மு.க பேச்சாளர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தமிழகத்தில் ஏற்பட்டு வரும் பாலியல் சம்பவங்களை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் ஆகியோர் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி நகரில் முக்கிய பகுதிகளில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் ஆகியோரது உருவப்படங்களை பொள்ளாச்சி அனைத்து மகளிர் என்ற பெயரில் செருப்பு மாலை அணிவித்து கம்பத்தில் கட்டி தொங்க விடப்பட்டது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அவமதிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க வினர் சப் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள், மேலும் உருவப்படங்களை தொங்கவிடப்பட்டு இருந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் தி.மு.க பேச்சாளர் குட்டப்பன் என்பவன் மீது தேர்தல் விதிமுறை மீறல், தனி நபரை விமர்சித்தல், பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய சிலர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.














Leave a Reply