Categories

தொழில் முதலீடு வராததற்கு திமுக அரசின் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷனே காரணம் அன்புமணி பேட்டி

தர்மபுரி டிச 8,

தருமபுரி மாவட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. திமுக அரசு ஒரு சிறிய பணியையும் செய்யவில்லை. சிப்காட் தொழிற்சாலைக்காக சாலை அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தொழிற்சாலைகள் வரவில்லை. இதன் மூலம் திமுக அரசு தருமபுரி மாவட்டத்தை புறக்கணித்துள்ளது.

இதற்கான பதிலை வரவிருக்கும் தேர்தலில் மக்கள் கொடுப்பார்கள் என்றார்.வரும் டிசம்பர் 17.ம் தேதி, சாதிவாரி கணக்கெடுப்பு கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்தார். .

இந்தப் போராட்டத்திற்கு திமுகவை தவிர அனைத்து கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும், அமைப்புகளுக்கும் அழைப்பாணை விடுத்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

பிகாரில் நிதிஷ் குமார் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியதால் வெற்றி பெற்றார்.

தமிழ்நாட்டில் சமூக நீதியை முதல்வர் ஸ்டாலின் தானே புதைத்து விட்டார்.

கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, சமூகங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

அதுவே உண்மையான சமூகநீதி என அன்புமணி கூறினார்.

தமிழ்நாட்டில் நகராட்சி துறையில் 888 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு தெரிவித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியாளர் பணிக்கான நியமனத்தில் 25 இலட்சம் வரை ஹவாலா பணம் பரிமாறியதாக 232 பக்க அறிக்கை வெளிவந்துள்ளது. ஆனால் அதில் விசாரணை செய்யவில்லை. அதே சமயம், செய்தி வெளிவந்ததற்கே விசாரணை நடத்தப்படுவது சரியல்ல என அவர் விமர்சித்தார்.

மணல் கொள்ளை, ஊழல் உள்ளிட்ட அனைத்திலும் திமுக அமைச்சர்கள் தொடர்புடையவர்கள். முதல்வருக்கு மாநிலத்தில் என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை.

விரைவில் பெரிய கூட்டணி உருவாக்கப்படும், அது மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்கு முன் 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட நிலையில், இதுவரை 13 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கும் மக்கள் தெரிந்த பதிலை அளிப்பார்கள் என்றார்.தொழில்முனைவோர் தமிழ்நாட்டில் முதலீடு செய்யாமல், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு செல்லுவதற்குக் காரணம்

திமுக அரசின் “கலெக்ஷன், கமிஷன், கரப்ப்ஷன்” என அன்புமணி குற்றம்சாட்டினார்.

தொழில்முதலீடு முழுமையாக வந்துவிட்டதாக அமைச்சர் கூறுவது பொய்யாகும். 9 சதவீதம் மட்டுமே முதலீடு வந்துள்ளது என்றார்.ஜி.கே.மணி குறித்த புகாரை நோக்கி, “அன்புமணி துரோகி என்று சொன்னால் விலக தயார்” எனும் கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அவர், “அந்த விஷயத்தை கட்சி தொண்டர்களிடம் பேசுவேன்” என தெரிவித்தார்.