
சேலம் இணை இயக்குநர்
(மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள்) விசாரணை
தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை வழங்கும் அடிப்படை வசதிகள் குறித்த விவரங்கள்
தருமபுரி, ஜன. 29:
தருமபுரி மாவட்டம், அரூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பொறுப்பு மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணா மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன.
அரூர், ஆ. நிகிழ்வளவன் அளித்த புகாரின் அடிப்படையில் சேலம் நலப்பணிகள் இணை இயக்குநர் நந்தினி இன்று காலை 10.30 மணி முதல் மருத்துவமனையில் விசாரணை நடத்துகிறார்.

சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக நேர்வு கடிதம் (எண்: 13187/ஆகு1/1/2025) மற்றும் அழைப்பாணை (எண்: ந.க.6874/க3/2025-1) அடிப்படையில் நடைபெறும் இந்த விசாரணையில், புகார் தொடர்பான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
“மருத்துவர் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் “

தினசரி மருத்துவமனைக்கு வராமல் வாரம் 1-2 நாட்கள் மட்டும் வருகை செலுத்துதல்.
நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை இன்றி பாதிப்பு ஏற்படுதல்.
செவிலியர்கள் இரவு பணியை புறக்கணித்தல்.
தொகுப்பூதிய உதவியாளர்கள்,
ஆய்வக உதவியாளர்களை சொந்த சமூகத்தினருக்கு நியமனம் செய்தல் (மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது).
சொந்த மருத்துவமனையில் அதிக நேரம் பணி புரிதல்.
அரூர் அரசு மருத்துவமனைக்கு தினசரி 1000-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள்,
வந்து செல்கின்றனர்.
100-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக
சிகிச்சை பெற்று வருகின்றன.
24 மணி அவசர சிகிச்சை மையத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக சிகிச்சை தாமதம் ஏற்படுவதாக நோயாளிகள் வெளிப்படையாக கூறுகின்றனர்.
தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையின் அடிப்படை வசதிகள் மற்றும் சிகிச்சைகள்
தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை, அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் (பொதுவாக PHC, GH) இலவசமாக அடிப்படை சுகாதார வசதிகளை வழங்குகிறது.
இவை அரூர் அரசு மருத்துவமனைக்கும் பொருந்தும்:
அவசர சிகிச்சை மையம் (24 மணி): விபத்து, இதய நோய், பிரசவம் உள்ளிட்ட அவசரங்களுக்கு உடனடி சிகிச்சை. ஆக்ஸிஜன், டிரிப், ECG, டிராமா கெயர் உள்ளிட்ட வசதிகள்.புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளி சிகிச்சை: ஜனரோகங்கள், நீரிழிவு, BP, காயம், குழந்தை நோய்கள், பிரசவம் ஆகியவற்றுக்கு இலவச மருந்துகள், சோதனைகள்
(இரத்தம், சோதனை, X-ரே).குடும்பநல விரிவாக்கம்:
கர்ப்பிணி பராமரிப்பு, தடுப்பூசி, குடும்பக் கட்டுப்பாடு
(கருப்புற்றல், டிராப்).மருந்துகள் மற்றும் சோதனைகள்: CMCHIS திட்டத்தின் கீழ் 1,000-க்கும் மேற்பட்ட மருந்துகள் இலவசம். ஆய்வகம், ரேடியாலஜி இலவசம்.சிறப்பு சிகிச்சைகள்: டயாலிசிஸ், கேதார்ல் சிகிச்சை, கண்-மூக்கு-தொண்டை ஆகியவை சில அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும்; இல்லையெனில் மாவட்ட தலைநகருக்கு இலவச அனுமதி.
மாற்று வசதிகள்: 108 ஆம்புலன்ஸ் (இலவசம்), மகளிர் சுகாதாரம், முதியோர் பராமரிப்பு.இந்த வசதிகள்
அமைச்சர்
மா. சுப்பிரமணியன் தலைமையிலான சுகாதாரத் துறையால் மேற்பார்வையிட
படுகின்றன.
ஆனால், அரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் கவனமின்மை பொறுப்பின்மை காரணமாக
நோயாளிகளின் உயிருடன் மருத்துவர்கள் விளையாடுகின்றனர் என்கிறார்கள் பொதுமக்கள்.
பொதுமக்கள், அரசியல் கட்சிகள் கோரிக்கை
சுகாதாரத்துறை அமைச்சர்
மா. சுப்பிரமணியன் உடனடியாக விசாரணை முடிவுகளின் அடிப்படையில் மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்,
அரசியல் கட்சியினர் கோருகின்றனர்.
விசாரணை முடிவுகள் விரைவாக வெளியிட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.














Leave a Reply