Categories

கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகக் குழு பதவி ஏற்பு



கோவை செப் 29, கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் 30வது பொதுக்குழுக் கூட்டம்  ஆடிஸ் வீதியில் உள்ள கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த பொதுக்குழுக் கூட்டத்தில், மன்றத்தின் முன்னாள் தலைவர் காமராஜ், முன்னாள் செயலாளர் தங்கராஜ், முன்னாள் பொருளாளர் ரத்தன்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மன்றத்தின் ஆண்டறிக்கையை முன்னாள் செயலாளர் தங்கராஜ் தாக்கல் செய்து உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து மன்றத்தின் வரவு செலவு அறிக்கையை முன்னாள் பொருளாளர் ரத்தன்குமார் தாக்கல் செய்தார்.



இந்த பொதுக்குழுவில் 80க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு, பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

தொடர்ந்து, தேர்தல் அதிகாரி பாலமுருகன், 2026-2027ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகக் குழுவை அறிவித்தார்.

இதில் தலைவர், செயலாளர், துணைத்தலைவர், இணைச்செயலாளர் மற்றும் 6 செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய 13 பதவிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மன்றத்தின் புதிய தலைவராக சுஜித், செயலாளராக சௌந்தர் மோகன், பொருளாளராக ரமேஷ் குமார், துணைத் தலைவர்களாக நிதின், ரவி,இணைச்செயலாளர்களாக ரமேஷ், கார்த்திக் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாகத் வைர பெருமாள், பாஸ்கர் பாண்டியன், தாமோதரன்,பால்ராஜ், பிரசன்னா,ஜீவா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.