
கோவை அக் 31,
கோவை காரமடையைச் சேர்ந்த பரத் என்ற 19 வயது இளைஞர் பெட்டதாபுரம் பகுதியில் உள்ள கருப்பராயன் குட்டையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் பரத்தின் உடலை தேடி வருகின்றனர். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை காரமடையைச் சேர்ந்தவர் பரத், 19 வயதான இவர் பார்க் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி இ மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று மதியம் பரத் தனது நண்பர்கள் விஷ்ணு , ராகுல் ,நிதின், கிருஷ்ணா ஆகியோருடன் பெட்டதாபுரம் பகுதியில் உள்ள கருப்பராயன் குட்டையில் குளிக்க வந்துள்ளனர். நீரில் இறங்கி குளித்துக்கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்ற பரத் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்து பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் பரத்தின் உடலை தேடி வருகின்றனர். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.














Leave a Reply