Categories


காரிமங்கலம், அக்.31-
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே காளப்பனஅள்ளி கிராமத்தில் 4 வெள்ளாடுகளை திருடிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி குமாரசாமிபேட்டையை சேர்ந்தவர் கணேஷ்பிரபு 46. இவர் சொந்த ஊரான காளப்பனஅள்ளியில் உள்ள தனது 2.5 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அங்கு ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். தினமும் காலையில் வந்து ஆடு, மாடுகளை பார்த்துவிட்டு இரவில் தருமபுரிக்கு சென்று விடுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 30ம் தேதி மாலை 3 மணிக்கு வழக்கம் போல் 4 ஆடுகளை நிலத்தில் கட்டிவிட்டு சென்றுள்ளார். மறுநாள் 31ம் தேதி காலை 11 மணிக்கு வந்து பார்த்தபோது 4 ஆடுகளும் காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. அப்போது அங்கு வசிக்கும் குப்பன் என்பவரின் மகன் மதன், அருண் என்பவரின் வீட்டருகே 4 ஆடுகளை பார்த்ததாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கணேஷ்பிரபு அளித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குற்ற எண் 492/2026, பிரிவு 303(2) BNS-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் தொடர்புடைய காளப்பனஅள்ளியை சேர்ந்த அருண் 39 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 4 வெள்ளாடுகள் மீட்கப்பட்டன.

காரிமங்கலம் உதவி ஆய்வாளர் பெருமாள் வழக்கை விசாரித்து வருகிறார்.