Categories

அம்மம்பாளையம் நரிக்குறவர் காலனியில் சமத்துவ பொங்கல் விழா: பெண்களுக்கு புத்தாடைகள் வழங்கல்



சேலம், ஜனவரி 15:

பொங்கல் விழாவை முன்னிட்டு, ஆத்தூர் அம்மம்பாளையம் கிராமத்தின் நரிக்குறவர் காலனியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் தெற்கு தொகுதி மாவட்ட  செயலாளர் திருமதி
கி. காயத்ரி  தலைமையில், G VISION CHARITABLE TRUST சார்பில் அங்குள்ள அனைத்து பெண்களுக்கும் பொங்கல் பரிசாக புத்தாடைகள் வழங்கப்பட்டன.

இதுவரை அக்காலனியில் கண்டிராத வகையில் சமத்துவக் கொண்டாட்டமாக நடைபெற்ற இந்நிகழ்வு, சமூக ஒற்றுமையை வலியுறுத்தியது.

பொங்கல் மகிழ்ச்சியில் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் G VISION CHARITABLE TRUST தலைவர்
ப. வேல்முருகன், துணைத்தலைவர் பாலு ஸ்டீபன், சமூக ஆர்வலர்கள் மோகன்ராஜ், மனோசூரியன், சகோதரிகள் ஷீபா, மஞ்சுளா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.