
கோவை வடக்கு மாவட்டம் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்ணணி சங்கம் சார்பாக ஜோதிபுரம் பகுதியில் வீரபாண்டி ஒன்றியம், கூடலூர் கவுண்டம்பாளையம் நகர், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் இணைந்து ஆயுத பூஜை விழாவை விமர்சையாக கொண்டாடினர். இதில் 50 க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு பூஜைகள் செய்து ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவை ஜோதிபுரம் பகுதியில் ஆண்டுதோறும் கோவை வடக்கு மாவட்டம் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்ணணி சங்கம் சார்பாக அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் தங்களது ஆட்டோக்களை ஒன்றாக ஒரே இடத்தில் நிறுத்தி பூஜைகள் செய்தும், ஊர்வலம் நடத்தியும் ஆயுத பூஜை விழாவை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் இந்த ஆண்டும் வீரபாண்டி ஒன்றியம், கூடலூர் கவுண்டம்பாளையம் நகர், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் இணைந்து ஆயுத பூஜை விழாவை விமர்சையாக கொண்டாடினர். இதில் ஜோதிபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் 50 க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி மாலைகள் அணிவித்து, வாழைமரம் கட்டி அலங்காரம் செய்திருந்தனர்.
தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சுவாமி திரு உருவபடங்களுக்கு மாநில பொதுச் செயலாளர் வி எஸ் செந்தில்குமார் தலைமையேற்று கற்பூரம் தீபம் காட்டி ஆயுத பூஜை செய்தார். தொடந்து வாகனங்களுக்கு கற்பூர தீபாரதனை செய்து ஊர்வலத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இதில் 50 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மேட்டுப்பாளையம் சாலையில் ஜோதிபுரத்தில் இருந்து வீரபாண்டி பிரிவு வரை ஊர்வலமாக சென்று மீண்டும் ஜோதிபுரம் வந்து நிறைவடைந்தது. இதில் வண்ணக் காகிதங்களை பறக்கவிட்டும், வாண வேடிக்கை நிகழ்த்தியும் ஆயுத பூஜையை கொண்டாடினர். தொடர்ந்து நூற்றுக்கணக்கானோருக்கு பொங்கல், சுண்டல், தக்காளி சாதம் உள்ளிட்டவைகளை அன்னதானமாக வழங்கினர்.
இவ்விழாவில் மாவட்ட நிர்வாகிகள் முருகன், முருகானந்தம், செல்வம், படையப்பா, அசோக், ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் விஜய்சந்திரன், கணேசன்,ரமேஷ், சத்தியசீலன், ஆனந்தன், முருகன், கருப்புசாமி மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.














Leave a Reply