
*தருமபுரி, அக்.21-*
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

1959 அக்டோபர் 21-ம் தேதி, லடாக் பகுதியில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில், 20 பேர் கொண்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (CRPF) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சீன ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் *SI கரம் சிங் உட்பட 10 CRPF காவலர்கள் வீரமரணம் அடைந்தனர், 7 பேர் கைது செய்யப்பட்டனர்.* அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், 1960 ஜனவரியில் நடந்த IG-க்கள் மாநாட்டில் அக்.21-ம் தேதி காவலர் வீரவணக்க நாளாக அறிவிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடந்த ஓராண்டில் (2024 செப்.1 முதல் 2025 ஆக.31 வரை) நாடு முழுவதும் பணியின் போது உயிரிழந்த *186 காவலர்களின்* தியாகம் நினைவு கூறப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், வீரவணக்க நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், கூடுதல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்தனர்.
தொடர்ந்து சோக கீதம் இசைக்கப்பட்டு, காவலர்களுக்கு ஆயுதங்களை தலைகீழாக பிடித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி ஆசிரியர்
இளம்கனல்














Leave a Reply