Categories

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி சாலை மறியல் – 100-க்கும் மேற்பட்டோர் கைது


தர்மபுரி அக் 21,
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில், விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், தருமபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும், நீர்ப்பாசன திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த சாலை மறியல் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தகவலறிந்து வந்த பாலக்கோடு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதனால் பாலக்கோடு பேருந்து நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தருமபுரி  மாவட்டம் செய்தியாளர்
ஜி.முனியப்பன்
செல்: 9600869772