
தர்மபுரி அக் 21,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் பாலாறு வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு வேளாண்மை பயிலும் மாணவர்கள் பங்கேற்ற ஊரக வேளாண்மை பணி அனுபவம் (RAWE – AEX 401) திட்டம் வேளாண்மை இணை இயக்குனர் ரத்தினம் தலைமையில் நடைபெற்றது.
வேளாண்மை இணை இயக்குனர் ரத்தினம், உதவி இயக்குனர்கள் கருப்பையா,வேளாண்மை அலுவலர்
அனுசியா, உதவிப் பேராசிரியர் வெங்கடேசன், உணவுப் பாதுகாப்பு அலுவலர் திருப்பதி மற்றும் கால்நடை மருத்துவர் டாக்டர். போர்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் விவசாயிகளுக்குப் பயனுள்ள பல்வேறு தொழில்நுட்ப செயல்முறை விளக்கங்களை அளித்தும், சமச்சீர் கால்நடை தீவனம் தயாரிப்பு, உள்ளூர் தீவனப் பொருட்களைக் கொண்டு கனிமக் கலவையுடன் கூடிய பால் வளத்தை பெருக்கும் தீவன தயாரிப்பு முறை, பண்ணை நில அமைப்பு திறமையான நீர் நிர்வாகத்திற்கான பாத்தி-வாய்க்கால் முறை மற்றும் நில இடைவெளி அமைப்புகள், கால்நடை நோய் மேலாண்மை நோய் தடுப்பு முறைகள் மற்றும் பராமரிப்பு குறித்த எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் வெண்ணிலா மேரி,சுஷாந்த், மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டம் செய்தியாளர்
ஜி.முனியப்பன்
செல்: 9600869772














Leave a Reply