Categories

பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி – போலியான புத்தகங்கள் புகார் எதிரொலி : அதிகாரிகளிடம் தீவிர விசாரணை!


கோவை நவ 10,

அகற்றப்பட்ட அகல் விளக்கு & பீனிக்ஸ் புத்தகங்கள்: பரிந்துரை செய்தவர்கள் யார் ? கோவையில் பரபரப்பு!

கோவை, காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் தரமற்ற மற்றும் போலியான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) போலீசார் நேரில் சென்று அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை, காந்திபுரத்தில் இயங்கி வரும் பெரியார் அறிவுலக நூலகத்திற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட நூல்களில், ‘அகல் விளக்கு’ மற்றும் ‘பீனிக்ஸ்’ ஆகிய பதிப்பகங்களின் புத்தகங்களில் பல்வேறு முறைகேடுகளும், விலை பதிவேற்றத்திலும் போலியான தகவல்களும் இடம்பெற்று இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதன் தொடர்ச்சியாக, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பெரியார் அறிவுலகத்தின் தமிழ் பிரிவு நூலகத்தில் வைக்கப்பட்டு இருந்த அந்தப் சர்ச்சைக்குரிய பதிப்பகங்களின் புத்தகங்கள் அனைத்தும் அவசர அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டன.

புத்தகங்கள் அகற்றப்பட்ட நிலையிலும், இந்த அப்பட்டமான கொள்முதல் முறைகேடு மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தற்போது பெரியார் அறிவுலகத்தில் நேரடியாகக் களமிறங்கி தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் நூலகத்திற்கு வாங்கியதாகக் கணக்குக் காட்டப்பட்ட புத்தகங்களின் உண்மையான எண்ணிக்கை மற்றும் இருப்பு விவரங்கள்.

சர்ச்சைக்குரிய அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகப் புத்தகங்களைக் கொள்முதல் செய்யப் பரிந்துரைத்த உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் விவரங்கள்.

பதிப்பகங்களுக்கு வழங்கப்பட்ட கொள்முதல் தொகை மற்றும் அதற்கான பில்களின் உண்மைத் தன்மை.
அறிவுலக அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புப் துறையினர் தொடர் விசாரணை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றி வருவதால், இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து முக்கியப் புள்ளிகள் சிக்கக்கூடும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சம்பவம் கோவை அரசியல் மற்றும் இலக்கிய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள்ளது.