
கோவை அக் 22,
26 வது வார்டு பீளமேடு ஏ. டி காலனி பகுதியை சேர்ந்தவர், அசோக் குமார், கெளசல்யா தேவி தம்பதியினர். இவர்களுக்கு நேத்ரா என்ற மகளும், 16 வயதான அகிலன் என்ற மகனும் உள்ளனர்.
அகிலன் 10ம் வகுப்பு வரை மாநகராட்சி பள்ளியில் பயின்று வந்தவர், 11ம் வகுப்புக்காக, கோவை பீளமேடு அடுத்த கொடிசியா பகுதியில் உள்ள, தனியார் பள்ளியில் சேர்ந்து, 11ம் வகுப்பு படித்து வந்தாக கூறப்படுகிறது.
இந்த பள்ளியில் இம்மாணவரின் க்ளாஸ் ரூமில், மொத்தமாக 45 பேர் பயின்று வருவதாக கூறப்படுகிற நிலையில், அகிலனுடன் சேர்ந்து வேறு இரு மாணவர்களும் ஒரு சார் சமூக பிரிவை சேர்ந்தவர்கள், மீதமுள்ள 43 மாணவர்களும் பிசி மற்றும் எம்பிசி ஆகிய பிரிவுகளை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
இந்த மாணவர்களின் ஜாதியை சமீபத்தில் தெரிந்து கொண்ட சக மாணவர்கள், அகிலன் உள்ளிட்ட ஒருசார் சமூகமாக மாணவர்களை ஒதுக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் பள்ளியில் அகிலனுக்கு யாரும் நண்பர்களாக இல்லாத நிலையில், ஜாதியின் பெயரை சொல்லி இழிவு செய்து வந்ததாக கூறபடுகின்றது.
விடுமுறைக்கு முன்னர் பள்ளியில் சக மாணவர்கள் அகிலனை நீ அந்த சமூகத்தை சார்ந்தவன் தானே நீங்க மாட்டுக்கறிதான சாப்பிடுவீங்க என்று கூறி சக மாணவர்கள் மத்தியில் கேலி செய்து சிரித்ததாகவும், இதனால் கூடுதலாகவே அகிலன், கடந்த சில நாட்களாக மன ரீதியாக பாதிக்கபட்ட நிலையில் கானபட்டு வந்ததாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் ஆயுத பூஜை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்க பட்ட நிலையில், அகிலன் வழக்கம் போல காலையில் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக காலையில் கூறி சென்றுள்ளார்.
தொடர்ச்சியாக அகிலன் வீட்டில் இருந்த ஒவ்வொருவராக வேலைக்கு சென்றதாக கூறபடுகின்றது.
ஆனால் அகிலன் பள்ளிக்கு செல்லாமல் தனது வீட்டுக்கு வந்து மனவிரக்தியில், தாயின் சேலையை பயண்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மதிய உணவுக்காக அகிலனின் தந்தை வீட்டுக்கு வந்துள்ளார் அப்பொழுது மகன் தூங்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து இவரது சபதம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த அக்கம்பக்கத்தினர் பீளமேடு காவல்நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர்.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மாணவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[22/10, 12:06 pm] Joshap Malai Malar: *Follow up Update*
*கோவை அரசு உதவி பெறும் பள்ளியில் , பட்டியல் இன மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்* –
*மாணவனிடம் மாட்டுக்கறி சாப்பிடுவீர்களா என கேள்வி எழுப்பிய ஆசிரியர்*
*நடவடிக்கை எடுக்காத தலைமையாசிரியர்*
*சக மாணவர்கள் இருவர் என 4 பேர் மீது 3 பிரிவுகளில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு*















Leave a Reply