Categories

விடுதலை சிறுத்தைகள் கட்சி விளம்பரப் பேனர்கள் அகற்றத்தை கண்டித்து கடத்தூர் காவல் நிலையம் முற்றுகை


தர்மபுரி, ஜனவரி 16:

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் கடத்தூர் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர் செ. சென்னகிருஷ்ணனை வாழ்த்தும் வகையில் வைக்கப்பட்ட விளம்பரப் பேனர்களை காவல்துறை அழுத்தம் கொடுத்து அகற்றியது கட்சியினரால்  எதிர்ப்புக்குள்ளானது.
இதற்கு கண்டனமாக கடத்தூர் காவல் நிலையத்தை முற்றுகை செய்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இப்போராட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர முகாம் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.ஆர்ப்பாட்டத்திற்குப் பின் அரூர் துணை காவல் கண்காணிப்பாளர், பேனர்களை பொதுமக்களுக்கு இடையூறாக இல்லாமல் மீண்டும் அமைக்க அனுமதி வழங்கினார்.