
அரூர் வழக்கறிஞர் சங்கத் தேர்தலை உடனடியாக நடத்தவும், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தை அமைக்கவும் வலியுறுத்தி நாளை நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
போராட்ட விவரங்கள்
அரூர் சார்பு நீதிமன்றம் அருகில் மார்ச் 4-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடத்தத் திட்டமிட்டிருந்த
வழக்கறிஞர். அரூர் பார் உறுப்பினர் அ.வடிவேலன் (பி.எஸ்.சி., பி.எல்., வழக்கறிஞர், உறுதிமொழி ஆணையர்) பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் தேர்தல் நடத்தப்படாததையும், நீதிமன்றத் திறப்பு தாமதமாகியதையும் கண்டித்து இது முதல் கட்டப் போராட்டமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
காவல்துறை மறுப்பு காரணங்கள்
மனுவை பரிசீலித்த காவல்துறை, நீதிமன்ற வளாக அருகே போராட்டம் நடத்தினால் நீதிமன்றப் பணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் எனக் கூறி அனுமதி மறுத்தது.
அரூர் உட்கோட்டத்தில் மார்ச் 13 வரை கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன என காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக உத்தரவு தெரிவித்துள்ளது.
போராட்டத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதியதால் அனுமதி ரத்து செய்யப்பட்டது.
முக்கிய கோரிக்கைகள்
அரூர் பார் அசோசியேஷன் தேர்தல் உடனடியாக நடத்தல்.
அனைத்து நீதிமன்ற ஓபன் கோர்ட்டுகளிலும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் புகைப்படமும் அரசியலமைப்பு முகப்புரையும் நிறுவல்.
சித்தேரி, கொளகம்பட்டி, கோபிசெட்டிப்பாளையம், சின்னங்குப்பம், மொரப்பூர் ரயில்வே காவல், கம்பைநல்லூர், கோபிநாதம்பட்டி ஆள்வரைகளை அரூர் நீதிமன்றங்களில் சேர்த்தல்.
அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடம், வழக்கறிஞர்களுக்கான கூடுதல் சேர்கள் அமைத்தல்.
தர்மபுரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், கூடுதல் மகளிர் நீதிமன்றம் அரூரில் அமைத்தல்;
நீதிமன்ற கழிவறை சுத்தம்,
குடிநீர் வசதி.அரூர் காவல் நிலையத்தை சட்டம்-ஒழுங்கு, க்ரைம் என பிரித்தல்; அம்மாபாளையம் ஆள்வரையை கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் சேர்த்தல்;
கோட்டப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டிக்கு
தனி காவல் ஆய்வாளர்கள் நியமனம்; அரூர் நீதிமன்ற காலி பணியிடங்கள் நிரப்பல்.தமிழக நீதிமன்றங்களிலும் தர்மபுரி காவல் நிலையங்களிலும் இந்து கடவுள்கள், இதர மத காலண்டர்கள், சாமி புகைப்படங்களை உடனடியாக அகற்றல்.














Leave a Reply