Categories

தேர்தல் பணியில் பெண் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து, அடிப்படை வசதிகள்: சண்முகநாதன் கோரிக்கை



தர்மபுரி, மார்ச் 22:

தர்மபுரி மாவட்டம் அரூரில் தனியார் திருமணமண்டபத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

மாவட்ட அமைப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் சண்முகநாதன் கலந்து கொண்டு பேசினார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேர்தல் பணியில் ஈடுபடும் பெண் ஆசிரியர்களுக்கு ஊதிய இடத்திற்கு தேவையான போக்குவரத்து வசதி மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என கோரினார்.

மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்யவும் அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் மன்றத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி: சண்முகநாதன்
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்