
தருமபுரி டிச 8,
கடத்தூரில் கடையடைப்பு: வணிகர் மீது தாக்குதலை கண்டித்து போராட்டம்
தருமபுரி மாவட்டம் கடத்தூரில் கடை உரிமையாளர்கள் மீது தாக்குதல் நடந்ததை கண்டித்து இன்று கடத்தூரில் உள்ள வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
காலை முதல் மதியம் 12 மணிவரை கடைகளை மூடி வணிகர்கள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.
கடத்தூரைச் சேர்ந்த அன்பு (வயது 40) என்ற நபர், செவ்வாய்க்கிழமை இரவு, அந்த ஊரில் நகைக்கடை நடத்தி வருகிற நாகராஜகுப்தா மற்றும் அருகாமையிலுள்ள மூன்று ஜவுளிக்கடை உரிமையாளர்களுடன் தகராறு ஏற்படுத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் அவர் கடை ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும் தாக்கியும் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வியாபாரிகள் பரபரப்பு அடைந்துள்ளனர்.
அவர்கள்மீது நடைபெறும் தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
இந்தக் கோரிக்கையைக் கவனிக்கச் செய்வதற்காகவே கடத்தூரில் இன்று வணிகர்கள் ஒருங்கிணைந்து கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.














Leave a Reply