
ஆம்பூர் அருகே சோப் வாங்கினால் பரிசு கூப்பன் மூலம் வீட்டு உபயோகப்பொருட்கள் தருவதாக பணம் பறித்த கும்பலை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஆம்பூர். டிச.9-
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல், தாங்கள் விற்கும் சோப்பு வாங்கினால் அதில் விழும் பரிசு கூப்பன் மூலம், டிவி, ஏர் கூல்ர், கேஸ் அடுப்பு, உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்களை தருவதாகவும், இதற்கு முன் பணம் அளிக்க வேண்டும் எனக்கூறி 7500 ரூபாய் பணத்தை பெற்றுச்சென்ற நிலையில், அவர்கள் அளித்த பொருட்கள் முறையாக வேலை செய்யாத நிலையில், மற்றொரு கும்பல் மீண்டும் சோப் வாங்கினால் பரிசு கூப்பன் தருவதாக வந்த போது, அவர்களை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து, அவர்களை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்,
அதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த பொலிஸார் அவர்களிடம் விசாரணை செய்த போது, அவர்கள் வெட்டுவானம் பகுதியை சேர்ந்த சுரேஷ், ராஜா மற்றும் பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த ராஜா என்பது தெரியவந்துள்ளது, அதனை தொடர்ந்து அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.














Leave a Reply