
கே.கே.நாயுடு பள்ளியின் அனுமதியை ரத்து செய்து இப்பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் – மே 17 இயக்கத்தின் நிறுவனத்தலைவர் திருமுருகன் காந்தி பரபரப்பு பேட்டி.

கோவை அக் 22,
கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள கே.கே.நாயுடு மேல்நிலை பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவன் அகிலன் ஜாதிய ரீதியான தாக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த. செய்தியை கேட்டு அவரது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற பீளமேடு காவல் நிலையம் வருகை தந்த மே 17 இயக்கத்தின் நிறுவனத்தலைவர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கோவை அரசு உதவி பெறும் கே.கே.நாயுடு மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் அகிலன் படித்து வருகிறார். அவர் பட்டியல் இனத்தை சார்ந்த மாணவன் என தெரிந்தவுடன் அவருக்கு மன உளைச்சல் தருகிற வகையில் நடத்தப்பட்டிருகின்றார். சக மாணவர்களுக்கு அவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்று ஆசிரியர் தரப்பு மூலம் தெரியப்படுத்தப் பட்டதாகவும்,மேலும் அவர் மாட்டுக்கறி உண்ணும் பழக்கம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே சக மாணவர்களிடம் மற்றும் பள்ளிக்கூடத்தில் பல்வேறு பணிகளில் அவர் ஒதுக்கப்பட்டு இருக்கின்றார். இதை மாணவன் தனது பெற்றோர்களிடம் கூறியதாகவும், அவர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பிறகும் மாணவன் அகிலன் மீது தொடர் ஜாதிய ரீதியான துன்புறுத்தல் இருந்து கொண்டு இருந்துள்ளது. இதை இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார். ஆகவே மன உளைச்சல் அடைந்த மாணவன் அகிலன் தன்னை தானே மாய்த்துக் கொண்டுள்ளான். 16 வயதுடைய மாணவனுக்கு இதுபோன்ற வன்கொடுமை நடக்கின்றது என்றால் இது போன்ற பள்ளிகள் தொடர்ந்து இயங்கலாமா? என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்புவதாக அவர் கூறினார். பள்ளிக்கல்வி துறை உடனடியாக இந்த பள்ளியின் அனுமதியை ரத்து செய்து இப்பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று மே 17 இயக்கத்தின் நிறுவனத் தலைவர் திருமுருகன் காந்தி பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.














Leave a Reply