
கிருஷ்ணகிரி அக் 23,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே.ஆர்.பி. அணை மற்றும் கிணற்று நீர் பாசனம் மூலமாக விவசாயிகள் முதல் போக நெல் சாகுபடி செய்துள்ளனர். இன்னும் ஒரு சில வாரங்களில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி அருகே உள்ள மூங்கில்புதூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியும், நிலத்தில் சாய்ந்தும் நாசமாகியுள்ளது.
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நிலத்தில் சாய்ந்ததைக் கண்ட விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

*இது குறித்து விவசாயி சக்திவேல் கூறியதாவது:-*
மூங்கில்புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இவை அனைத்தும் அறுவடைக்கு தயாரான நிலையில், காற்றுடன் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் அப்படியே நிலத்தில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் ஏக்கருக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண்மை அதிகாரி மற்றும் வேளாண்மை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தும் முறையான பதில் கூறாமல், விவசாயிகளின் கோரிக்கையை அலட்சியம் செய்வதாக வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும் இந்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.














Leave a Reply