Categories

திருப்­பெ­ரும்­பு­தூர் பிள்­ளைப்­பாக்­கம்
சிப்­காட்­டில் ரூ. 200 கோடியில் பிக்­டெக் தொழிற்­சா­லையை – முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!



திருப்­பெ­ரும்­பு­தூர்.டிச.6–

திருப்­பெ­ரும்­பு­தூர் பிள்­ளைப்­பாக்­கம் சிப்­காட்­டில் ரூ. 200 கோடி முத­லீட்­டில் அமைக்­கப்­பட்­டுள்ள பிக்­டெக் தொழிற்­சா­லையை  இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் .அங்கு வந்த முதல்வருக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

காஞ்­சி­பு­ரம் மாவட்­டம், திருப்­பெ­ரும்­பு­தூர் வட்­டம், பிள்­ளைப்­பாக்­கம் சிப்­காட்­டில் ரூ. 200 கோடி முத­லீட்­டில் அமைக்­கப்­பட்­டுள்ள பிக்­டெக் என்ற தொழிற்­சாலை அமைந்துள்­ளது.

தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு தொழில்துறை எஸ்டேட் ஆகும். மின்னணு உற்பத்தி, குறைக்கடத்திகள், நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் ஐ டி  வன்பொருள் உற்பத்திக்கான வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தி, மின்னணு மற்றும் மின் கூறுகள் உற்பத்தித் துறைகளை ஆதரிப்பதற்காக இந்தப் பூங்கா அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நவீன உள்கட்டமைப்பு, அரசாங்க சலுகைகள் மற்றும் முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு மூலோபாய அருகாமையில் இருப்பதால், பிள்ளைப்பாக்கம்தொழில்துறை பூங்கா, இந்தியாவில் முன்னணி மின்னணு உற்பத்தி மையமாக தனது நிலையை வலுப்படுத்தும் தமிழ்நாட்டின் முயற்சிகளில் ஒரு முக்கிய பகுதியாகும்.

இப்­பு­திய தொழிற்­சாலை திறப்பு விழா இன்று காலை 9.30 மணி­ய­ள­வில் நடந்தது.  முத­ல­மைச்­சர் தலை­வர் மு.க.ஸ்டாலின்இப்­பு­திய தொழிற்­சா­லையை திறந்து வைத்தார் .

முன்னதாக இந்த தொழிற்­சா­லையை திறந்து வைக்க வந்த முதல்­வர் மு.க.ஸ்டாலினுக்கு

காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்ட தி.மு.க சார்­பில், மேள–­தா­ளம், பேண்டு வாத்­தி­யம் முழங்க பிரம்­மாண்­ட­மான வர­வேற்பு அளிக்கப்­பட்­டது.