Categories

திருப்புவனம் அருகே சக்குடியில் போலீஸ் வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

மதுரை நவ 12,

திருப்புவனம் அருகே சக்குடியில் போலீஸ் வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி  – உறவினர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை  பிணவறையில் குவிந்துள்ளதால் பரபரப்பு
மதுரை மாவட்டம் சிட்டப்பட்டி சேர்ந்த பிரசாத் (25), அவரது மனைவி சத்யா (20), மகன் அஷ்வின் (2) ஆகியோர், மதுரை அனஞ்சியூர் பகுதியில் மரணமடைந்த உறவினர் தங்கம்மாளின் இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் மதுரை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் சோனை ஈஸ்வரி (25) என்பவரும் பயணம் செய்தார்.



இந்நிலையில் நேற்று சக்குடி அருகே அவர்கள் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது வழியே எதிரே வந்த ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதியதில், பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்யா மற்றும் அஷ்வின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.
சோனை ஈஸ்வரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நேற்று இரவு அப்பகுதியில் உடலை எடுக்க விடாமல்,  போலீஸ் வேன் டிரைவரை கைது செய்ய வேண்டும் என கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை ஏற்படுத்தி உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்..

இந்நிலையில் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறை பகுதியில் இறந்தவர்களின் உறவினர்கள் 200க்கும் மேற்பட்டோர் துணிந்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக விபத்து ஏற்படுத்தி சென்ற அந்த காவல்துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் எனவும் அதுவரை உடலை வாங்கி செல்ல மாட்டோம் எனவும்,

வாகன விபத்தை ஏற்படுத்திய காவலர்களை கைது செய்தால் மட்டுமே இந்த இடத்திலிருந்து கலைந்து செல்வோம் என மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறை பகுதியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

200க்கும் மேற்பட்ட உறவினர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பகுதியில் திரண்டு உள்ளதால் இப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்,

மேலும் உறவினர்கள் காவல்துறையிடம் அவர்களது கோரிக்கை வலியுறுத்தி பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல்துறை வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவர் மனைவி இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

*இறந்த  பெண்ணின் தங்கை பேட்டி அனுப்பப்பட்டுள்ளது**உறவினர்கள் கோரிப்பாளையம் பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு*

*காவல்துறையினர் தொடர்ந்து அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்*


*சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கோரிப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது*