
சென்னை டிச 6,
இசுஸு மோட்டார் நாடு முழுவதும் இசுஸு ஐ கேர் வின்னர் கேம்ப் எனும் சிறப்பு சேவை முகாமை 2025 டிசம்பர் 8 முதல் 13 வரை அனைத்து அங்கீகாரம் பெற்ற சேவை மையங்களில் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இசுஸு டி மேக்ஸ் பிக்-அப்கள் மற்றும் எஸ்யூவி வாகனங்களுக்கு முன்காப்பு பராமரிப்பு, சலுகைகள் மற்றும் பாதுகாப்பு பரிசோதனைகளை வழங்கும் இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு எளிதான, பாதுகாப்பான ஓட்டுநர் அனுபவம் கிடைப்பதே நோக்கமாகும்.
இந்த வின்டர் கேம்ப், இந்தியா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெற்றது. வாகன பராமரிப்பு தள்ளுபடி, இலவச பரிசோதனைகள் மற்றும் சீசன் ஸ்பெஷல் பலன்களுடன் அனைத்து இசுஸு உரிமையாளர்களுக்கும் கூடுதல் நன்மைகள் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள டீலரை தொடர்பு கொண்டு அல்லது இசுஸு இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.
“இசுஸு வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த தரச் சேவையை வழங்குவது எங்களின் முதன்மை பொறுப்பு. குளிர்கால பயணங்களில் எந்த சிக்கலும் இல்லாமல் பாதுகாப்பான ஓட்டம் கிடைக்க இந்த வின்டர் கேம்ப் பெரிதும் உதவும்,” என்று இசுஸு மோட்டார் இந்தியா நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் கூடுதல் தகவல்களுக்கு 1800 4199 188 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்.














Leave a Reply